Thursday 10 February 2011

எப்போது முடிவுறும்

பச்சரிசிப் பல்லிரண்டு எட்டிப் பார்க்கயிலே‍ மகளே
பக்கமிருந்து அதை பார்த்து மகிழ‌வில்லை
எட்டி அடியெடுத்து வைக்கயிலே மகளே உன்
குட்டிக் க்ரம் பிடித்து தாங்கவில்லை
சுட்டித்தனம் பார்க்கத் தவிக்குதடி மனது உன்
பட்டுக்கன்னமதில் மெல்ல முத்தமிட‌த் துடிக்குதடி

ஓடிவந்து மடி வீழ்ந்து ஏறி மிதித்து உதைந்து
என் பெரிய மகள் விளையாட‌
அணைத்து முத்தமிட்டு என் ஆசை தீர்ப்பேனே
என் வயிறு தலையணை போல்
எப்போதும் இருக்குதெண்டு செல்லமாய் குத்தி
மெல்ல வயிற்றில் தலை சாய்த்து
இடுப்பை வளைத்து அணைப்பான் என் மகன்

வாசலையே பார்த்திருந்து வேலைவிட்டு வந்தவுடன்
வேணுமென்றே கோபம் கொண்டு
விளையாட்டாய் சண்டை போட்டு
காதலுடன் ஊடலுமாய்
கணவனோடு வாழ்ந்தேனே

எப்படிப் பிரிந்து வந்தேன்.. ஏனிந்த பிரிவுத்துயர்
எப்போது முடிவுறும் என் ஏக்கமும் வேதனையும்
இதற்கு மேல் முடியாது இறைவா என்
இதயத்திற்கு சக்தி கொடு...

3 comments:

  1. நினைவுகள் எல்லாம் கொடுமை அனாலும்
    கனவுகள் என்றும் நிமிர்ந்திருக்கட்டும்

    ReplyDelete
  2. கவிஞருக்கு.
    வணக்கம்.
    தங்களின் கவிதை அற்புதம்.
    உலக முதலைகளின் மனிதத் தன்மையற்ற அடாவடிதனங்கள் அரங்கேற்றப்பட்ட வன்னி மண்ணின் கவிக்குரலைக் கேட்கிறேன்.அதிகாரக் கரங்களுக்கு பாரபட்சம் இல்லை. சில சமயம் நினைப்பதுண்டு.நெற்றிக் கண்ணே இல்லாத பாங்கி மூனின் மேற் பார்வையில் மானுடம் தோற்ற மண்ணில் குழந்தைகள், மனைவிகளின், கணவனின், உறவுகளின் இழப்புக்கள் சோகம் தருகிறது. அது கவிதையில் தெரிகிறது.
    வாழ்த்துகள்.
    முல்லைஅமுதன்

    ReplyDelete
  3. நன்றி யாதவன், முல்லை அமுதன் அவர்கள்.... தொடர்ந்தும் என் தளத்திற்கு வரவேற்கிறேன். கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!