Thursday 13 February 2014

வாடீ என் தோழி....

வாடி என் தோழி நட்பின்
வாசனை மலரடி நீயே
வாடிப் போகிறேன் மேலும் -உன்
வாதைகள் கண்டுமே நானும்
தோளில் சாயவும் நீயடி-என்னை
தோளில் தாங்கவும் நீயடி
தாள்கள் தளர்ந்திடும் வேளையில்- என்
தோள்கள் வருடவும் நீயடி..
எங்கு நீ சென்றாலும் தோழி
உன்னோடு நானிருப்பேன் நாடி
தூரப் போகாதே வாடி-என்னை
துயரத்தில் தள்ளாதே போடி...

பொம்மைச் சண்டையெல்லாம் போச்சு
வெம்மை நெஞ்சில் பரவலாச்சு
பொய்மையில் தொலைந்தவள் நானடி-இனி
புவியினில் வாழ்வெனக்கேதடி.
சொல்லியழ முடியவில்லை - நான்
சொல்லிப் புரியும் ரகமுமில்லை
மெல்லும் வழி தெரியவில்லை
மெல்லாதுமிழத் தோன்றவில்லை
ஊர் உறங்கிப் போனதடி தோழி -என்
உசிர் உறங்க மறுக்குதடி  தோழி
பாவி இவ கொண்ட சொந்தம்  தோழி
பாதியிலே  தவிக்குதடி தோழி...
எத்தனை தான் வந்தாலும்  வாழ்வில்
எந்தன் அன்பு மாறாது தோழி
நட்பு வானில் இன்றுபோல் என்றும்
கைகோர்த்துப் பறந்திடுவோம் வாடி....

3 comments:

  1. ரசிக்க வைக்கும் நட்பு வரிகள்... தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மாறாத நட்பு கவிதை...!

    ReplyDelete
  3. "எங்கு நீ சென்றாலும் தோழி
    உன்னோடு நானிருப்பேன் நாடி
    தூரப் போகாதே வாடி-என்னை
    துயரத்தில் தள்ளாதே போடி..." என்ற
    அழகான அடிகள்
    அடியேனின் உள்ளத்தில்
    வந்து குந்தி இருக்கிறதே!

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!